மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் எஸ். சுதாகரன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் பிரித்தானியாவில் உள்ள ஒரு பானை தன்னார்வ தொண்டு நிறுவனத்தினால் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பட்டிப்பளை பிரதேச மக்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே முரளிதரனினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன .
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவர் மாமாங்கராஜா உப தலைவர், ரி.பத்மராஜா,உதவி பிரதேச செயலாளர் திருமதி மேனகா புவிக்குமார், பட்டிப்பளை பிரதி திட்டமிடல் பணிப்பாளர் பிரபாகரன், கிராமசேவை உத்தியோகத்தர் மற்றும் சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர் .
இவ் உலர் உணவுப் பொருட்கள் பட்டிப்பளையின் 10 கிராம சேவையர் பிரிவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 96 குடும்பத்தினருக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் அனர்த்தங்கள் எற்படும் போது சிவில் சமூக அமைப்பினரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇