1986 ஆம் ஆண்டு அண்டார்டிக் கடற்கரையில் இருந்து ஒரு பெரிய பனிப் பாறை பிரிந்தது.
அது விரைவாக வெட்டல் கடலில் தரைதட்டி, ஒரு பனித் தீவாக மாறியது.
உலகின் மிகப்பெரிய பனிப்பாறையான குறித்த பனிப்பாறை ஏ23ஏ என்று அழைக்கப்படுகிறது.
கிட்டத்தட்ட 4,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவுகொண்ட குறித்த பனிப்பாறை, ஒருங்கிணைந்த லண்டன் நகரத்தைவிட இரண்டு மடங்கு பெரியது என குறிப்பிடப்படுகின்றது.
இது அண்டார்டிகாவின் பில்ச்னர் பனிப்பரப்பில் இருந்து பிரிந்த பனிப்பாறைகளின் ஒரு பகுதியாகும்.
இந்த பனிப்பாறை கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் வேகமாக நகரத் தொடங்கியது.
இந்த நிலையில் குறித்த பனிப்பாறை வடக்கு நோக்கி செல்வதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இந்த பனிப்பாறை ஒரு டிரில்லியன் டன் தண்ணீரைக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇