அபிவிருத்திக்கான சமூக முயற்சியாளர்களின் வலையமைப்பின் மூலம் கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்தி பேரவை வளாகத்தில் மரம் நடும் நிகழ்வு 19.02.2024 அன்று இடம்பெற்றது.
சைவநெறிக்கூடம் அருள்ஞானமிகு ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் பேர்ன், சுவிற்சர்லாந்து ஆலய அமைப்பினரின் அனுசரணையில் மரம் நடும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் கல்முனை வடக்கு செயலக பிரதேச செயலாளர் ரீ.ஜெ.அதிசயராஜ், அம்பாறை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி, கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியத்தின் உபதலைவரும் பாண்டிருப்பு நாவலர் அறநெறி பாடசாலையின் அதிபருமான லக்குணம் மற்றும் கல்முனை தமிழர்கலாசார
அபிவிருத்தி பேரவையின் தலைவர் ஆ.வினாயப்பிள்ளை, உபதலைவர் கே.நடேசன், இணைச்செயலாளர் S.சுப்பிரமணியம், பொருளாளர் K.இதயராஜா மற்றும் அபிவிருத்திக்கான சமூக முயற்சியாளர்களின் வலையமைப்பு ஸ்பாண்ட் அமைப்பின் தலைவர் ரா.சுவோஜன் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் ஆலோசகர்கள்
நலன் விரும்பிகள் என பலர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇