மட்டக்களப்பு மாவட்டத்தில் நன்னீர் மீன்வளர்ப்பை அபிவிருத்தி செய்வதற்கான உயர்மட்ட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் 07.03.2024 அன்று இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங் அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், ஆர்.எச்.பொத்துவில, பட்டிப்பளை பிரதேச செயலாளர் எஸ்.சுதாகரன், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரின் பிரத்தியோக செயலாளர் த.தஜீவரன், மாவட்ட நீர் உயிரின வளப்பு விரிவாக்கல் உத்தியோகத்தர் ஜே.நெல்சன், துறைசார் நிபுணர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தவிசாளர் வி.விஜயரத்ன தலைமையிலான குழுவினர் மாவட்டத்தில் நன்னீர் வளர்ப்பை அதிகரிப்பதற்கான முன்னாயத்த கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளனர்.
இக் கலந்துரையாடலின் போது நன்னீர் மீன்வளர்ப்பிற்கு உகந்த நிலங்கள் வன திணைக்களத்தில் காணப்படுவதனால் அவர்களுடன் இணைத்து மாவட்டத்தில் நன்னீர் மீன் வளர்ப்பை ஊக்குவிக்க முடியும் என துறைசார் நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.
இத் திட்டத்தின் மூலம் மாவட்டத்தின் மீன் குஞ்சு பொரிக்கும் தொழிற்சாலை நிறுவப்படவுள்ளதனால் மாவட்டத்தில் ஊட்டச்சத்து நிறைந்த மீன் நுகர்வை அதிகரிக்க முடியுமென கருத்துப் பரிமாறப்பட்டது.
சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத முறையில் நன்னீர் மீன்வளர்பை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இதன் போது அரசாங்க அதிபர் கருத்து தெரிவித்தார்.
புதிய தொழில் நுட்பத்தின் மூலம் நன்னீர் மீன் வளர்ப்பின் சிறந்த விளைச்சளை பெற முடியும் என துறை சார் நிபுணர்கள் தெரிவித்தனர்.
மேலும் வன இலாகாவின் அனுமதி பெற்று இத் திட்டத்தை நடைமுறைபடுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாகவும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇