பல்வேறு சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அவர்களில் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 43 பேரும், பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த 22 பேரும், சுதந்திரமான தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பிலிருந்து 6 கண்காணிப்பாளர்களும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
அத்துடன், தங்களது அழைப்பின் பேரில் அயல் நாடுகளைச் சேர்ந்த 7 கண்காணிப்பாளர்களும் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇