உலகில் அதிக மக்கள் பயன்படுத்தும் சமூக ஊடகங்களில் ஒன்றான வாட்ஸ்அப் (Whatsapp) புதிய அம்சமொன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.
அந்த வகையில் வாட்ஸ் அப்பில் குரல் பதிவு மூலமான செய்திகளை (Voice Message) எழுத்து வடிவில் மாற்றக்கூடிய ஓர் முறை தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப் பயனர்கள் தமக்கு அனுப்பப்பட்ட குரல் பதிவினை செவிமடுக்க முடியாத சூழ்நிலைகளில் இந்த வழிமுறையை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
தற்போது பரீட்சார்த்த அடிப்படையில் சில நாடுகளில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் வாரங்களில் உலகளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇