2023ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை இன்று வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். குறித்த பரீட்சைக்கு மூன்று இலட்சத்து 42 ஆயிரத்து 883 பேர் விண்ணப்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2023ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை ஜனவரி மாதம் 4ம் திகதி முதல் 30ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான நேர அட்டவணை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளதில் இன்றைய தினம் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டார். முன்னதாக கல்வி பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை இந்த வருடம் நவம்பர் மாதம் ஆரம்பமாகவிருந்த நிலையில், மாணவர்களின் நன்மை கருதி அடுத்த வருடம் ஜனவரி மாதம் வரை பிற்போடப்பட்டது.
இதேவேளை, உயர் தரப்பரீட்சைக்கு புதிதாக விண்ணப்பிப்பவர்கள் இன்று முதல் எதிர்வரும் 10ம் திகதி வரை இணைய வழியூடாக தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.