தொடருந்துப் பெட்டிகள் இன்மையால் 4 தொடருந்து சேவைகளை இரத்துச் செய்ய தொடருந்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.
பிரதான மார்க்கம் மற்றும் களனிவெளி தொடருந்து பாதையிலேயே குறித்த சேவைகள் இரத்தாகியுள்ளன.
எதிர்வரும் 25 ஆம் திகதி வரை இந்த நடைமுறை அமுலில் இருக்கும் என தொடருந்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, பிரதான மார்க்கத்தில் காலை 7.02க்கு கொழும்பு கோட்டையில் இருந்து ராகமை நோக்கி பயணிக்கும் தொடருந்து சேவையும், ராகமையில் இருந்து காலை 7.30க்கு கொழும்பு – கோட்டை நோக்கி பயணிக்கும் தொடருந்து சேவைகளும் இரத்தாகியுள்ளன.
அத்துடன் களனிவெளி வீதியின் பாதுக்கை தொடருந்து நிலையத்தில் இருந்து அதிகாலை 5.20க்கு கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்கும் தொடருந்து சேவையும் கொழும்பு கோட்டையில் இருந்து இரவு 7.15 அளவில் பாதுக்கை நோக்கி பயணிக்கும் தொடருந்து சேவையும் இரத்தாகியுள்ளதாக தொடருந்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇