அவுஸ்திரேலியாவின் தென்மேற்கு பகுதியான டோபிஸ் இன்லெட்டில் 160 பைலட் திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய நிலையில் 130 திமிங்கலங்கள் காப்பாற்றப்பட்டு மீண்டும் கடலுக்குள் விடப்பட்டுள்ளது.
டோபிஸ் இன்லெட்டில் திடீரென்று நேற்று திமிங்கலங்கள் கரையொதுங்கின.
அவற்றை காப்பாற்றும் முயற்சியில் கடல் உயிரியலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.
கரை ஒதுங்கிய பைலட் திமிங்கலங்களில் ஆபத்தான நிலையில் இருந்த 28 திமிங்கலங்கள் கரையில் மூச்சு விடமுடியாமல் இறந்து போன நிலையில் மீதமுள்ள திமிங்கலங்கள் காப்பாற்றப்பட்டு கடலுக்குள் விடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், ஒரு திமிங்கலம் கரையில் தவறுதலாக மாட்டிக் கொண்ட நிலையில் அடுத்தடுத்து திமிங்கலம் வரிசையாக கரையில் சிக்கி இருக்கலாம் என கடல்வாழ் ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇