நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவாவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஜோர்ஜியாவில் இடம்பெற்றுவரும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 57 ஆவது வருடாந்திர மாநாட்டில் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பங்கேற்றுள்ளார்.
அதன்போது இடம்பெற்ற இச் சந்திப்பில் தற்போதைய பொருளாதாரம் மற்றும் செயற்திட்டத்தின் நிலையான முன்னேற்றத்துக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இலங்கைக்கு தமது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதற்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிலையான உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தியதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇