இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலப்பகுதியில் 44,430 வாகனங்கள் சந்தைக்கு கொண்டுவரப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
உள்ளூர் வாகன உற்பத்தியாளர்கள் குழுவுடன் நிதியமைச்சில் 06.06.2024 அன்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவற்றில் 38,144 உந்துருளிகள் மற்றும் 6,286 மகிழுந்துகள் உள்ளடங்குவதாக நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இதன்போது வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇