அடுத்த மாதம் முதலாம் திகதிக்குப் பின்னர் மரக்கறிகளின் விலை அதிகரிக்கலாம் என ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் அறுவடைக் காலம் இல்லாததால் மரக்கறிகளின் விலையில் அதிகரிப்பை எதிர்பார்க்கலாம் என அதன் ஆராய்ச்சி அதிகாரி துமிந்த பிரியதர்ஷன தெரிவித்தார்.
மேலும் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலைகளில் சிறிதளவு வித்தியாசம் காணப்பட்டாலும் , இந்த நாட்களில் மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி காணப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇