மட்டக்களப்பு மாவட்ட செயலக புதிய கட்டடத் தொகுதியில் நிர்வாக பணிகளை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் 10.06.2024 அன்று ஆரம்பித்து வைத்தார்.
மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் இயங்கிய மாவட்ட செயலகத்தின் இடவசதி பற்றாக்குறையினால் 2016 ஆம் ஆண்டு புதிய மாவட்ட செயலகத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு கட்டடத் தொகுதியின் நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருகின்றது.
புதிய கட்டடத்தொகுதியில் பாரியளவு நிர்வாக விடயங்களும் மிகுதி நிர்வாக சேவை ஒல்லாந்தர் கோட்டையிலும் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இப் புதிய கட்டடத் தொகுதியின் திறப்பு விழா மிக விரைவில் இடம் பெறும் என அரசாங்க அதிபர் இதன் போது கருத்துத் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான தர்ஷினி ஸ்ரீகாந்த், நவரூபரஞ்சினி முகுந்தன், மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் எதிர்காலத்தில் இதுவரை காலமும் மாவட்ட செயலகமாக இயங்கி வந்த ஒல்லாந்தர் கோட்டை சுற்றுலாத் தளமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிய வருகின்றது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇