மின்சார கட்டண திருத்த சட்டமூலம் தொடர்பான யோசனை இலங்கை மின்சார சபையினால் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களிடம் கருத்துக்கள் பெறப்பட்டதன் பின்னரே பொது பயன்பாடுகள் ஆணைக்குழு இறுதி முடிவை அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நிர்ணயிக்கப்பட்ட அலகுக்கான கட்டணத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, 0 முதல் 30க்கு இடைப்பட்ட அலகொன்றுக்கான கட்டணம் 8 ரூபாவிலிருந்து 6 ரூபாய் வரையும், 31 முதல் 60 வரையான அலகொன்றுக்கான கட்டணம் 20 ரூபாவிலிருந்து 9 ரூபாய் வரையும் குறைப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
61 முதல் 90 க்கு இடைப்பட்ட அலகொன்றுக்கான கட்டணம் 30 ரூபாவிலிருந்து 18 ரூபாய் வரையும், 91 முதல் 180 வரையான அலகொன்றுக்கான கட்டணம் 50 ரூபாவிலிருந்து 30 ரூபாய் வரையும் குறைக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇