சமுர்த்தி வங்கி சங்க முகாமையாளர்களுடனான விசேட கலந்துரையாடலொன்று மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவ சந்திரகாந்தன் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனின் பங்குபற்றுதலுடன் மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.ராஜ்பாபு தலைமையில் இந் நிகழ்வு இடம் பெற்றது.
மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளில் கடமையாற்றும் சமுர்த்தி வங்கி சங்க முகாமையாளர்கள் கலந்து கொண்டதுடன் சமுத்தி வங்கிகளின் முன்னேற்றங்கள் மற்றும் கடன் வழங்கள் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டது.
இதன் போது கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் மாவட்டத்தில் உற்பத்தி துறையினை அபிவிருத்தி செய்வதற்கும் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிப்பதற்கும் கடன் வழங்கலை ஊக்குவிக்க வேண்டும் என்றார் மேலும் சமுர்த்தி வங்கிகளை வினைத்திறனாக மாற்றுவதற்கு அனைவரும் செயற்பட வேண்டும் எனவும் கூறினார்.
இந் நிகழ்வில் மாவட்ட செயலக சிரேஷ்ட முகாமையாளர் ஜே.எப்.மனோகிதராஜ், மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரின் பிரத்தியோக செயலாளர் த.தஜீவரன், சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னேடுப்பதற்கும் சமுர்த்தி பயனாளிகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கு பல மில்லியன் நிதி சமுர்த்தி திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇