இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இம் மாதத்தின் கடந்த 13ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் இவ் விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி இந்தியாவில் இருந்து 12,144 பேர் நாட்டுக்கு வருகைதந்துள்ளனர்.
அத்துடன் பிரித்தானியாவில் இருந்து 3,475பேரும், சீனாவில் இருந்து 3,095 பேரும், அவுஸ்திரேலியாவில் இருந்து 2,272 பேரும் நாட்டுக்கு வருகைதந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇