மரக்கறிகள் மற்றும் பழங்களின் அறுவடைக்குப் பின்னரான சேதம் 25 வீதமாக குறைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் பயிரிடப்படும் பழங்கள் மற்றும் மரக்கறிகளின் அறுவடைக்குப் பின்னரான சேதங்களைக் குறைப்பதற்கு பரிந்துரைக்கப்பட்ட முறைகளைப் பயன்படுத்தாததன் காரணமாக அறுவடைக்குப் பின்னரான சேதம் 40 வீதமாக அதிகரித்துள்ளதாக அறுவடைக்குப் பின்னரான தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்திருந்தது.
தற்போது விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் பல்வேறு தீர்மானங்களினால் பயிர் சேதம் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, அறுவடைக்கு பின்னர் போஞ்சி விற்பனை நட்டம் 40 இல் இருந்து 23 வீதமாகவும், வெண்டைக்காய் 40 இல் இருந்து 28 வீதமாகவும், கத்திரிக்காய் 30வீதத்தில் இருந்து 20 வீதமாகவும், முட்டைகோஸ் 43 இல் இருந்து 20 வீதமாகவும் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
பழங்களில், அதன்படி, பப்பாளியின் அறுவடைக்கு பிந்தைய இழப்பு 46 வீதத்தில் இருந்து 19 சதவீதமாகவும், கொய்யா 40 வீதத்தில் இருந்து 20 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇