வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் 09/09/2024 அன்று சந்தித்துக் கலந்துரையாடினர்.
ஆளுநரின் யாழ்ப்பாணத்திலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இச் சந்திப்பு நடைபெற்றது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான வடக்கு மாகாணத்தின் கள நிலவரங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. சுதந்திரமானதும் , நீதியானதுமான தேர்தல் நடைபெற வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என ஆளுநர் கூறினார்.
அமைதியான முறையில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்த ஆளுநர் , மக்கள் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினரிடம் தெளிவுப்படுத்தினார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇