விவசாயத்துறையின் புத்தாக்க திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வாழைப்பழ செய்கையும் மாம்பழ செய்கையும் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
ஏற்றுமதியை இலக்காக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த செயற்திட்டத்தில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் வாழைச் செய்கையும் 500 ஏக்கர் நிலப்பரப்பில் மாம்பழ செய்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
எதிர்காலத்தில் மேலும் 400 ஏக்கர் நிலப்பரப்பில், வாழை பயிர்ச்செய்கையை விரிவுபடுத்த தயாராக உள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇