“அ” கலையகத்தின் தயாரிப்பிலும், கிரேசன் பிரசாத்தின் இயக்கத்திலும், உருவாக்கப்பட்டுள்ள ஒமேகா முழுநீளத் திரைப்படத்தில் அகல்யா டேவிட், ஜானு முரளிதரன், காண்டீபன், அஜித் சுந்தர், தில்சி மகேந்திரன், ஜெரோஷன், பாரதி கென்னடி உட்பட பலர் நடித்திருந்தனர்.
மூன்று வருடகாலமாக தயாரிக்கப்பட்ட இத்திரைப்படத்தின் விசேட காட்சி கடந்த 15-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று கல்லடி சுகந்தி திரையரங்கில் திரையிடப்பட்டது.
சமூகத்தில் காணப்படும் உணர்வுபூர்வமான ஒரு பிரச்சினையை மையப்படுத்தியதாக இத்திரைப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்ததாகவும், அதில் நடிகர்கள் சிறப்பாக நடித்திருந்ததாகவும் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
அடுத்த மாதம் மேலும் பல காட்சிகளைத் திரையிட இருப்பதாக இயக்குநர் கிரேசன் பிரசாத் தெரிவித்தார்.