ஜூனியர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டி அமெரிக்காவில் உள்ள பப்ளோ நகரில் நடைபெற்று வருகிறது.
அப் போட்டியில் பெண்கள் 75 கிலோ எடைப்பிரிவின் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை கிரிஷா வர்மா 5-0 என்ற கணக்கில் ஜெர்மனியின் சிமோன் லிரிகாவை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளார்.
மேலும் இந்திய வீராங்கனைகள் சன்சல் சவுத்ரி (48 கிலோ), அஞ்சலி குமாரி சிங் (57 கிலோ), வினி ( 60 கிலோ), அகன்ஷ் பலாஸ்வால் (70 கிலோ) ஆகியோர் தங்களது இறுதிப்போட்டியில் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்தை பெற்றுள்ளனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇