பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் தபால் மூலம் விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரையிலும் சில பகுதிகளுக்கு வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படாமல் உள்ளதாக தபால்த் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி மேலும் 50,000 வாக்காளர் அட்டைகள் தபால் நிலையங்களில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளத
கடந்த ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி முதல் இந்த மாதம் 07ஆம் திகதி வரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் வாக்காளர்களின் வீடுகளுக்கு தபால்த் திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்டன.
இந் நிலையில் இதுவரை வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள் அருகிலுள்ள அஞ்சல் திணைக்களத்துக்கு சென்று பெற்றுக்கொள்ளுமாறு பிரதி தபால்மா அதிபர் ராஜித கே.ரணசிங்க தெரிவித்துள்ளார் பொதுத்தேர்தலுக்கு இன்னும் 04 நாட்களே உள்ளன.
இதன்படி தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நாளை (12.11.2024) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇