சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்வதற்காக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு இன்று (25) கூடவுள்ளது. வைத்தியர்கள் பற்றாக்குறை மற்றும் மருந்து நெருக்கடி தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர், வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
பெருமளவான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளமையால் சுகாதாரத் துறை எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது. இது குறித்து எதிர்காலத்தில் எடுக்கப்படவுள்ள தீர்மானங்கள் தொடர்பிலும் புதிய சுகாதார அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளமையால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇