கிழக்கு மாகாண தொழில் முயற்சியாளர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கிழக்கு மாகாணத்திற்கான தொழில் முயற்சியாளர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் 18.02.2025 அன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜயசிங்க தலைமையில் கிழக்கு பல்கலைக்கழக Techno Park நிலையத்தில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன், கிழக்கு பல்கலைக்கழக வர்த்தக துறையின் பீடாதிபதி பேராசிரியர் என்.ராஜேஸ்வரன் உள்ளிட்ட ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதன் போது தொழில் முயற்சியாளர்களை ஏற்றுமதி சந்தையினுல் இணைத்து அவர்களை அபிவிருத்தி செய்வதற்கான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் இதன்போது வழங்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை சர்வதேச தரத்தில் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அந்நிய செலாவணியை பெற்றுக் கொள்வதற்கான விழிப்புணர்வுகள் இதன்போது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் இலங்கையில் இருந்த 12 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட போதிலும் 19 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதனால் இந் நிலையை மாற்றுவதற்கான செயற்றிட்டங்கள் மற்றும் முயற்சியாளர்களுக்கான வங்கி கடன்கள் வழங்குதல், குத்தகைக்கு காணி வழங்குதல் போன்ற மேலும் பல விடயங்கள் இதன் போது உயரதிகாரிகளினால் தெளிவுபடுத்தப்பட்டது.

அதிதிகள் வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து ஆரம்ப நிகழ்வாக கண்காட்சியினை பிரதம அதிதி உள்ளிட்ட அதிதிகள் பார்வையிட்டு, அதனை ஆரம்பித்து வைத்ததனைத் தொடர்ந்து, அதிதிகள் உரை மற்றும் தெளிவு படுத்தல்கள் என்பன இடம்பெற்றது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects