பாடத்திட்டத்தின் உள்ளடக்கங்களில் மாத்திரம் மாற்றங்களை மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பு – ஹரிணி அமரசூரிய

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

தரம் ஒன்று மற்றும் தரம் 6 இற்கான பாடத்திட்டங்களின் உள்ளடக்கங்களில் மாற்றம் செய்வதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துரைக்கையிலே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த வேலைத்திட்டத்தினை 2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.

அதேநேரம் ஏனைய தரங்களில் பயிலும் மாணவர்களுக்கான கல்விச் சுமைகளைக் குறைப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

பரீட்சை முறைமைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படாது.

பாடத்திட்டத்தின் உள்ளடக்கங்களில் மாத்திரம் மாற்றங்களை மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

தற்போதைய பாடத்திட்ட உள்ளடக்கங்களானது, 21 ஆம் நூற்றாண்டிற்குப் பொருத்தமானதாக அமைந்திருந்தாலும், சில விடயங்கள் தொடர்பில் ஆசிரியர்களுக்கான பயிற்சி போதுமானதாக இல்லை.

இதன் காரணமாக மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் பாரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது.

இதனை நிவர்த்திக்கும் வகையில் எதிர்காலத்தில் ஆசிரியர்களுக்குப் பயிற்சிகளை வழங்கும் வகையில் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects