பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தங்கள் ஊர்களுக்கு செல்லும் மக்களுக்கு எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் விசேட புகையிரத சேவைகளை இயக்க புகையிரதத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. 

அதன் பிரகாரம், இந்த விசேட புகையிரத சேவைகள் இரண்டு கட்டங்களாக இயக்கப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதன்படி, 11, 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் கொழும்பிலிருந்து பதுளை, அனுராதபுரம், காலி, கண்டி மற்றும் பெலியத்த ஆகிய பகுதிகளுக்கு விசேட புகையிரதங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் புத்தாண்டு நிறைவடைந்து கொழும்பு திரும்பும் மக்களுக்காக எதிர்வரும் 18, 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் விசேட புகையிரதங்கள் இயக்கப்படும் என்றும் புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதற்கிடையில், புத்தாண்டுக்காக சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக, இலங்கை போக்குவரத்துச் சபை 9 ஆம் திகதி முதல் மேலதிகமாக 500 பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects