மட்டக்களப்பில் போதைப்பொருள் முற்தடுப்பை மேற்கொள்வதற்கான பயிற்சி பாசறை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் போதைப்பொருள் முற்தடுப்பை மேற்கொள்வதற்கான பயிற்சி பாசறையானது முதுமாணி பயிற்றுவிப்பாளர்களுக்கு இடம் பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்தின் வழிகாட்டுதலில் மாவட்டத்தில் போதைப்பொருள் முற்தடுப்பை மேற்கொள்வதற்கான முதுமாணி பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சியானது மாவட்ட செயலக மண்டபத்தில் மாவட்ட போதைப் பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர் ப.தினேஷ் ஏற்பாட்டில் இடம் பெற்றது.

மாவட்டத்தில் போதைப் பொருள் முற்தடுப்பு திட்டத்தை வலுவூட்டும் செயற்றிட்டமாக இவ் நிகழ்வு இடம் பெற்றது.

கிராம, பிரதேச மட்டத்தில் போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்கு தேவையான விழிப்புணர்வுகள் இவ் உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் வளவாளராக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலைய சிரேஷ்ட நிகழ்ச்சி திட்ட அதிகாரி ஏ.சி.றஹீம், நிகழ்சி திட்ட அதிகாரி எஸ்.நிதர்ஷனா, போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர்கள், சமூதாயாசார் சீர்திருத்த உத்தியோகத்தர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் எனப் பலர் கலந்து கொண்டனர்.

தேசிய ரீதியில் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தினால் போதைப்பொருள் முற்தடுப்பு நிகழ்ச்சி திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects