கனமழை குறித்து எச்சரிக்கை விடுத்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையின் பிரகாரம், மேல், சப்ரகமுவ மற்றும் வட மாகாணங்களிலும் , காலி, மாத்தறை, நுவரெலியா, கண்டி மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் இவ்வாறு கனமழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை நிலைமை நாடு முழுவதும் படிப்படியாக நிலைப்பெற்று வருகிறது.
இதன் தாக்கத்தால், நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழை நிலைமை இன்று (19.05.2025) மற்றும் அடுத்த சில நாட்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமாகாணங்களுக்கும், காலி, மாத்தறை, நுவரெலியா, கண்டி மற்றும் புத்தளம் மாவட்டங்களில் சில இடங்களில் 100 மி.மீ.க்கு மேல் கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
எனவே, குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










