- தேயிலை மர எண்ணெயில் சில துளிகள் ஆமணக்கு எண்ணெயுடன் சேர்த்து, அவற்றை ஒரு பருத்தி உருண்டையால் மருக்கள் மீது தடவவும். இந்த நடைமுறையை தினமும் இரண்டு முதல் மூன்று முறை செய்யதால் விரைவில் நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும்.
- விட்டமின் E ஐ, மருக்களின் மேல் சிறிது வைத்து, ஒரே இரவில் விட்டு விடுங்கள். குறைந்தது 2 வாரங்களுக்கு இதை தொடர்ந்து செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
- மருக்கள் நீங்கும் வரை தினமும் சுமார் இரண்டு வாரங்களுக்கு ஆமணக்கு எண்ணெயை மருக்களின் மீது தடவவும்.
- இரண்டு சொட்டு அப்பிள் சைடர் வினிகரை ஒரு பங்கு தண்ணீருடன் எடுத்துக் கொள்ளவும். கலவையில் ஒரு பருத்தி பந்தை ஊறவைத்து, தொடர்ந்து 15 நிமிடங்கள் தடவவும். தொடர்ந்து 2 வாரங்களுக்கு இப்படி செய்து வர மருக்கள் மறைவதை எளிதில் காணலாம்.
- பூண்டை தோல் உரித்து அதனை சிறிய துண்டுகளாக வெட்டி அதனை மருக்களின் மீது தேய்க்க வேண்டும். அல்லது பூண்டை பேஸ்டாக செய்து மருக்கள் மீது தடவலாம். இப்படி செய்வதன் மூலம் சில நாட்களில் மருக்கள் வேரோடு விழுந்து விடும்.
- எலுமிச்சை சாறை பருத்தித் துணியில் நனைத்து மருக்கள் மீது தடவலாம். இப்படி தொடர்ந்து செய்வதன் மூலம் மருக்கள் விரைவில் உதிர ஆரம்பிக்கும்.
- உருளைக்கிழங்கு சாறை மருக்களின் மீது தேய்ப்பதன் மூலம் மருக்கள் நீங்கும். இரவு முழுவதும் உருளைக்கிழங்கு சாற்றை மருவின் மீது தடவி வைத்திருந்து காலையில் அதனை கழுவலாம்.
- பேக்கிங் சோடாவுடன் ஆமணக்கு எண்ணெயைக் கலந்து பேஸ்ட் போல் செய்து மருக்கள் மீது தடவவும். ஒரு சில நாட்களில் மருக்களில் நீங்கள் வித்தியாசத்தைப் பார்க்க முடியும்.
- அன்னாசிப் பழச் சாற்றினை மருக்கள் மீது தடவி காய விடவும். இப்படி செய்வதன் மூலம் சில நாட்களிலேயே மருக்கள் காணாமல் போகும்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










