இன்று (19.06.2025) நள்ளிரவு முதல் பதவி உயர்வில் தாமதம் உட்பட பல பிரச்சினைகளை முன்வைத்து 48 மணி நேர பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
புகையிரத அதிகாரிகளுடன் அவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக இன்று (19.06.2025) காலை கலந்துரையாடிய பின்னர், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் என புகையிரதக் கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் பொதுச் செயலாளர் கே.டி.டி. பிரசாத் தெரிவித்துள்ளார்.
புகையிர திணைக்களத்தில் முக்கிய சீர்திருத்தங்களை செயல்படுத்துவது உட்பட பல கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இப் பணிப்பகிஷ்கரிப்பில் மேற்கொள்ளப்படவுள்ளதாக தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










