“Clean Sri Lanka” திட்டத்தின் கீழ், நாளாந்த விபத்துகளைத் தடுப்பதன் மூலம் பிரஜைகளின் வீதி பாதுகாப்பு குறித்த அறிவு மற்றும் மனப்பான்மையை வளர்க்கும் திட்டமொன்று செயல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, “Clean Steps – Safety Roads – Be united for road safety” வீதிப் பாதுகாப்பு மற்றும் காப்புறுதி குறித்து பாடசாலை மாணவர்களை தெளிபடுத்தும் இரண்டு திட்டங்கள் 26.06.2025 அன்று ருஹுணு பல்கலைக்கழகத்தின் ரவீந்திரநாத் தாகூர் மண்டபத்திலும், மாத்தறை கடற்கரை பூங்காவிற்கு அருகிலும் நடைபெற்றன.
அத்தோடு, இலங்கை பொலிஸாரின் பங்கேற்புடன் வீதிப் பாதுகாப்பு குறித்த கண்காட்சி 26.06.2025 அன்று காலை 8.00 மணி முதல் மாத்தறை கடற்கரை பூங்காவிற்கு அருகில் நடைபெற்றது.
இத் திட்டத்தில் மாத்தறை கல்வி வலயத்தைச் சேர்ந்த சுமார் 1300 பாடசாலை மாணவர்கள் பங்கேற்றனர்.
எதிர்காலத்தில் போக்குவரத்து விதிகளை நெறிமுறையாக பயன்படுத்துவதற்கு பாடசாலை மாணவர்களை இன்று முதலே பழக்கப்படுத்துவதே இத் திட்டத்தின் நோக்கமாகும்.
வீதி ஒழுங்குகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், விபத்துகளைத் தடுக்கவும், அதற்காகப் பொறுப்புடன் செயல்படவும் பாடசலை பாதுகாப்பு வட்டங்களை வலுப்படுத்தவும் இத் திட்டத்தின் ஊடாக எதிர்பார்க்கப்படுகிறது.









இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










