தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் சாதனை படைத்த மாணவர்கள்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் ஆனந்தசோதி லக்சயன், தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் 194 மதிப்பெண்களைப் பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இதேவேளை, காலி அம்பலாங்கொடை ஸ்ரீ தேவாநந்த பாடசாலை மாணவி ஷனுதி அமாயா அஸ்வினி, சிங்கள மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் 198 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (04.09.32025) அதிகாலை வௌியிடப்பட்டன.

இப் பரீட்சை கடந்த ஓகஸ்ட் 10 ஆம் திகதி நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 2,787 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது. 

மொத்தம் 307,951 பரீட்சார்த்திகள் இதில் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects