மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு கிரிசலிஸ் நிறுவனத்தால் அவசர அனர்த்த நிலைமைகளில் பயன்படுத்தும் உபகரணங்கள் கையளிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு கிரிசலிஸ் நிறுவனத்தினால் அவசர அனர்த்த நிலைமைகளில் பயன்படுத்தும் உபகரணங்களை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜிடம் இன்று (03.12.2025) கையளித்தனர்.

மாவட்ட அரசாங்க அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க கிரிசலிஸ் நிறுவன கிழக்கு மாகாண திட்ட முகாமையாளர் யூ.எல்.சம்சுதினினால் ஒரு மில்லியன் பெறுமதியான உபகரணங்கள் இதன் போது அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டன.

மாவட்டத்தில் வெள்ள அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு இவ் உபகரணங்கள் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் மேற்பார்வையின் கீழ் வழங்கப்படவுள்ளது.

மேலும் கிரிசலிஸ் நிறுவனமானது வாகரை மற்றும் வெருகல், செங்கலடி போன்ற பிரதேசங்களுக்கு 2.2 மில்லியன் பெறுமதியான நிவாரண பொதிகளை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் மாவட்ட செயலக பிரதம கணக்காளர் காயத்திரி ரமேஷ், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் என்.விமல்ராஜ், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் ஏ.எஸ்.எம் சியாத், மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர் எம்.சுரேஸ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects