புதிய கோட்டமுனை விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் உலகளாவிய ரீதியில் இருக்கும் கழக அங்கத்தவர்களின் பங்களிப்புடன் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டாம் கட்டமாக உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாலாமடு, வேப்பவெட்டுவான் போன்ற பகுதிகளில் உள்ள 35 குடும்பங்களுக்கு சுமார் 7000 ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் இதன் போது வழங்கி வைக்கப்பட்டது.
புதிய கோட்டமுனை விளையாட்டு கழக தலைவர் ஜே.சிந்துஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கழக மூத்த உறுப்பினர்களான அருள் பிரகாஷம், மட்டக்களப்பு மாவட்ட கனிப்பொருள் அகழ்வு அனுமதிப்பத்திர உரிமையாளர்கள் சங்க தலைவர் சஞ்சீவ குமார் டீ சில்வா மற்றும் கழக அங்கத்தவர்களும் இணைந்து இப்பொதிகளை வழங்கி வைத்தனர்.
முதல் கட்டமாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சீலாமுனை, பாலமீன்மடு, மாமாங்கம் போன்ற பகுதிகளில் 40ற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


















இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










