பச்சை மிளகாயின் விலை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கக்கூடும் என விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
பச்சை மிளகாய் செடிகளில் அடையாளம் தெரியாத நோய் பரவுவதால் முழுமையான அளவு பாதிக்கப்பட்டுள்ளதாக மதவாச்சி மற்றும் கெப்பட்டிப்பொல விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது, ஒரு கிலோகிராம் பச்சைமிளகாய் சந்தையில் 700 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
பச்சை மிளகாய் உள்ளிட்ட ஏனைய சில மரக்கறிகளின் விலையும் பண்டிகை காலத்தை முன்னிட்டு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










