கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் முன்னெடுக்கவிருந்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் உள்ளிட்ட தரப்பினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த தொழிற்சங்க நடவடிக்கை இன்றைய தினம் முன்னெடுக்கப்படவிருந்த நிலையில் 28.11.2023 அன்றிரவு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் ரொஷான் குமார தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇