இலங்கையை வந்தடைந்துள்ள இந்திய கடற்படையின் போர்கப்பலான ‘INS GHARIAL’ !

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இந்திய கடற்படையின் போர்கப்பலான ‘INS GHARIAL’ 04.02.02026 அன்று உத்தியோகபூர்வ விஜயத்திற்காக இலங்கையை வந்தடைந்துள்ளது.

கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலை கொழும்பு துறைமுகத்தில் வரவேற்றனர்.

நாட்டை வந்தடைந்துள்ள ‘INS GHARIAL’ என்ற போர்கப்பல் 124.8 மீட்டர் நீளம் கொண்டதுடன், இந்த போர் கப்பலின் கட்டளை அதிகாரியாக COMMANDER GAURAV TEWARI கடமையாற்றுகின்றார்.

இந்த விஜயத்தின் போது, இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் ஒருங்கிணைக்கப்பட்டு கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட பத்து (10) தற்காலிக பாலங்கள், நிலவும் சீரற்ற காலனிலையின் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் சேதமடைந்த பாலங்கள் சரிசெய்யப்படும் வரை தற்காலிக போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக அனர்த்த முனாமைத்துவ மத்திய நிலையத்திடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

‘INS GHARIAL’ என்ற போர்க்கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில், இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே நல்லெண்ணத்தை மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படை ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளில் அதன் குழுவினர் பங்கேற்க உள்ளனர். மேலும, நாட்டின்; பல பகுதிகளுக்குச் சென்று முக்கிய இடங்களைப் பார்வையிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects