மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும் உயர் அதிகாரிகளுக்கான நிர்வாகத்தில் மனித விழுமியங்கள் தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜின் தலைமையில் புதிய மாவட்ட செயலக மண்டபத்தில் இன்று (06.02.2026) நடைபெற்றது.
திருகோணமலை மாவட்ட ஓய்வு நிலை மேலதிக அரசாங்க அதிபர் என்.புவனேந்திரனினால் சிறந்த மனித விழுமியங்களை வளர்த்துக்கொள்வதனூடாக பொதுமக்களுக்கு கண்ணியமான அரச சேவையினை வழங்குவதல் தொடர்பாக வளவான்மை மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது தற்போதைய நவீன உலகில் சமூகத்தின் மாற்றம் மக்களின் மனவெழுச்சி அவர்களின் பிரச்சினைகள் மற்றும் உணர்வுகளை புரிந்து கொண்டு தீர்வு காணும் அணுகுமுறை தொடர்பாகவும் அறிஞர்களின் கருத்துக்களை சுட்டிக்காட்டி தெளிவூட்டியமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த், பிரதம பொறியியலாளர் ரீ.சுமன், பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஏ.எஸ்.சசிகரன், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
நிர்வாகத்தின் வெற்றி அதன் விதிமுறைகளில் மட்டும் தங்கியிருப்பவை அல்ல அதை செயல்படுத்தும் மனிதர்களின் விழுமியங்களில் உள்ளது. மனித விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தில் நிலையான வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.











இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










