நுவரெலியா மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதன்படி, இன்று (20.02.2026) காலை 8.00 மணிக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இந்த மண்சரிவு எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலத்திற்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம், பின்வரும் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு 02 ஆம் நிலை (ஆம்பர்) எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்டம்:
• நில்தண்டஹின்ன
• வலப்பனை
பின்வரும் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு முதலாம் நிலை (மஞ்சள்) எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
01. பதுளை மாவட்டம்:
• மீகஹகிவுல
• கந்தகெட்டிய
02.நுவரெலியா மாவட்டம்
• மதுரட்ட
• ஹங்குரன்கெத்த


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










