மசகு எண்ணெய் விலையில் மாற்றம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மத்திய கிழக்கின் முக்கிய எரிசக்தி உற்பத்தியாளர்கள் உற்பத்தியைக் குறைத்ததைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் 08.03.2026 அன்று மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. 

அதன்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் 18% உயர்ந்து பீப்பாய் ஒன்றின் விலை 108.68 டொலராக விற்பனை செய்யப்படுகின்றது. 

அமெரிக்காவின் WTI ரக மசகு எண்ணெய் சுமார் 20% அதிகரித்து பீப்பாய் ஒன்றின் விலை 108 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. 

2022 ஆம் ஆண்டு பெப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தபோது மசகு எண்ணெய் விலை 100 டொலரைத் தாண்டியது. 

அதற்குப் பின்பு ஏற்பட்ட மிகப்பெரிய விலை உயர்வு இதுவாகும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects