வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பொலிஸார்

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களுமே அதிகளவில் இவ்வாறான விபத்துக்களுக்கு உள்ளாகியுள்ளதாக போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மற்றும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே.சேனாதீர தெரிவித்தார்.

கடந்த வருடத்தின் தரவுகளை நோக்கும்போது, வீதியில் பயணித்த பாதசாரிகளில் 31 சதவீதமானோர் உயிரிழந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். அதனடிப்படையில், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் தரவுகளில் விபத்துக்கள் ஓரளவுக்கு அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பொதுமக்கள் வீதி ஒழுக்க விதிகளைச் சரியாகப் பின்பற்றி நடப்பதன் மூலம் இவ்வாறான விபத்துக்களைக் குறைக்க முடியும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் சேனாதீர குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:

“வீதியின் வலது பக்கமாக செல்லவும்.. அவதானத்துடன் செல்லுங்கள். தொலைபேசியில் பேசிக்கொண்டு செல்ல வேண்டாம்.. வீதியைக் கடக்கும்போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுங்கள். அதேபோல் ஓட்டுநர்களுக்குக் கூறுவது என்னவென்றால்.. விசேடமாக போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்துவோரைக் கண்டறியும் சோதனைகளை நாம் தீவிரப்படுத்தியுள்ளோம். விபத்துக்கள் மற்றும் விபத்துக்களைத் தடுத்தல் தொடர்பில் சமூகத்தில் தற்போது பாரிய உரையாடல் ஒன்று ஏற்பட்டுள்ளது.”

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects