எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் நீர் விநியோகம் மட்டுப்படுத்த வேண்டியிருக்கும் – தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில், தினசரி சில மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டியிருக்கும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர், பொறியியலாளர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார். 

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் தெரிவித்துள்ளதாவது, 

தற்போது சபை அவ்வாறான நீர் வெட்டு எதனையும் அமுல்படுத்தவில்லை. எனினும், நிலவும் காலநிலை நீடித்தால் வரும் நாட்களில் நாள் முழுவதும் தடையின்றி நீர் வழங்குவது கடினமாக அமையும். 

அம்பத்தலை உள்ளிட்ட நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் உற்பத்தித் திறனில் இதுவரை பாதிப்பு ஏற்படவில்லை. 

ஆனாலும், உயர்ந்த பகுதிகளில் வசிப்போருக்கு குறைந்த அழுத்தத்திலேயே நீர் கிடைத்து வருகின்றது. 

எதிர்வரும் காலங்களில் மழையை எதிர்பார்ப்பதாகவும், அதுவரை தற்போதுள்ள நீர் கொள்ளளவை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். 

மேலும், குறைந்த அழுத்தத்தில் நீர் கிடைக்கும் பகுதிகளுக்கு தற்போது பவுசர்கள் மூலம் நீர் விநியோகிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇


Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects