இலங்கை தனிநபர் வருமானம் குறித்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2025 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் எதிர்பார்ப்புகளைக் கடந்து வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அண்மைய வருடாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கைச் சீற்றங்கள் மற்றும் உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும், நாட்டின் பொருளாதாரம் 5.0% வளர்ச்சியை எட்டியுள்ளது.

மத்திய வங்கியின் தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில் 4,546 அமெரிக்க டொலராக இருந்த தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), 2025-ஆம் ஆண்டில் 5,003 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

இது இலங்கை மக்களின் வாழ்க்கைத்தரம் மற்றும் வாங்கும் திறன் மேம்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது.

அத்தோடு நாட்டின் மொத்த தேசிய வருமானமும் கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

ஆண்டின் ஒரு பகுதியில் ஏற்பட்ட ‘டித்வா’ புயலின் தாக்கத்தினால் பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டபோதிலும், ஆண்டின் நான்கு காலாண்டுகளுமே நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

இது இலங்கைப் பொருளாதாரத்தின் மீள்திறனை உறுதிப்படுத்துவதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். 

ரூ. 30,095.8 பில்லியனிலிருந்து ரூ. 32,750.8 பில்லியனாக அதிகரித்துள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி பணவீக்கக் குறியீடு 3.7% ஆகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு  99.6 பில்லியன் டொலரிலிருந்து 108.8 பில்லியன் டொலராக மக்கள் தொகையில் ஏற்பட்ட சிறிய அளவிலான சரிவு மற்றும் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விரிவாக்கம் ஆகிய இரண்டும் இணைந்து இந்தத் தனிநபர் வருமான அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தத் தரவுகள், கடந்த சில ஆண்டுகளாக இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு முழுமையாக மீண்டு வருவதற்கான ஒரு வலுவான சான்றாகப் பார்க்கப்படுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects