சுகாதாரத் துறையை மேம்படுத்த ரஷ்யா பூரண ஒத்துழைப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நாட்டின் ஆரம்ப சுகாதார சேவை பிரிவை மேம்படுத்தவும், அதனை செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் மூலம் பலப்படுத்துவதற்கும் ரஷ்யா தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என ரஷ்ய குடியரசின் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ உறுதியளித்துள்ளார்.

மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக 03.05.2026 அன்று இலங்கைக்கு வருகை தந்த அவர், சுகாதார மற்றும் வெகுன ஊடக அமைச்சில் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ உள்ளிட்ட அதிகாரிகளைச் 04.05.2026 அன்று சந்தித்துக் கலந்துறையாடியிருந்த போதே இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்.

இக் கலந்துரையாடலில் ரஷ்ய குடியரசின் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

ரஷ்யா தனது நாட்டில் ஆரம்ப சுகாதாரச் சேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதோடு, நோய்களைத் துல்லியமாகக் கண்டறிய நவீன தொழில்நுட்பங்களை வெற்றிகரமாகப் பயன்படுத்தி வருகின்றது. குறிப்பாக, விவசாய மற்றும் நகர்ப்புற மக்களிடையே காணப்படும் 42 வகையான நோய்களை அடையாளம் காணவும், ஆய்வகச் சேவைகள் மற்றும் சிறுவர் நோய்களைக் கண்டறியவும் செயற்றை நுன்னறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன உபகரணத் தொகுதிகள் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்தத் தொழில்நுட்ப அனுபவங்களை இலங்கையுடன் பகிர்ந்துகொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் இந்த கலந்துறையாடலின் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இலங்கை மருத்துவர்களுக்கு உயர் மருத்துவப் பயிற்சிகளை வழங்க ரஷ்யா முன்வந்துள்ளதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான மருந்து விநியோகச் சங்கிலியை மேலும் வலுப்படுத்த தான் விரும்புவதோடு, இலங்கையில் நிலவும் எரிசக்தி உள்ளிட்ட நெருக்கடி நிலைமைகளைச் சமாளிக்க ரஷ்யா தனது நட்புக்கரம் நீட்டவும் தளயாராக உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே புதிய புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்வதன் மூலம் இத்திட்டங்களை வினைத்திறனுடன் முன்னெடுக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அத்தோடு ரஷ்யாவின் இத்தகைய நவீன சிகிச்சை முறைகள் மற்றும் தொழில்நுட்பக் கட்டமைப்பு குறித்து நேரில் ஆராய இலங்கை சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தியோகபூர்வ அழைப்பையும் விடுத்திருந்தார்.

இந்த சந்திப்பில் சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி, ரஷ்ய தூதுவர் லெவான் ஜகாரியன் மற்றும் அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects