சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நடைபெற்ற நிகழ்வு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

அகில இலங்கை தாதியர் சங்கம் (All Ceylon Nurses’ Union) ஏற்பாடு செய்த சர்வதேச தாதியர் தினக் கொண்டாட்ட நிகழ்வு, ஊடகத்துறை பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன மற்றும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க ஆகியோரின் தலைமையில் 12.05.2026 அன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நரம்பியல் பிரிவின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு சர்வதேச தாதியர் பேரவையால் (International Council of Nurses – ICN) வெளியிடப்பட்ட “நமது தாதியர்களே நமது எதிர்காலம்: அதிகாரமளிக்கப்பட்ட தாதியர்கள் உயிர்களைக் காப்பாற்றுகிறார்கள்” என்ற தொனிப்பொருளை மையமாகக் கொண்டு இந்த நிகழ்வு நடைபெற்றது.

சுகாதாரத் துறையிலும் சமூகத்திற்காகவும் தாதியர்கள் ஆற்றும் தனித்துவமான பங்களிப்பு, அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்முறை கௌரவம் ஆகியவற்றை மதிப்பளிக்கும் நோக்கில் இந்த நிகழ்வு அமைந்திருந்தது. விழாவின் நோக்கத்தை அகில இலங்கை தாதியர் சங்கத்தின் கல்விச் செயலாளர் பிரசாத் பாலிபான விளக்கினார்.

அதனைத் தொடர்ந்து கொழும்பு பல்கலைக்கழக தாதியர் பீடத்தின் பேராசிரியர் சுதத் வர்ணகுலசூரிய மற்றும் ருஹுணு பல்கலைக்கழகத்தின் சம சுகாதார அறிவியல் பீடத்தின் தாதியர் துறைத் தலைவர் பேராசிரியர் நிர்மலா ரத்நாயக்க ஆகியோர் முதன்மை உரைகளை நிகழ்த்தியதுடன், உலக தாதியர் சேவையின் முன்னோடியான புளோரன்ஸ் நைட்டிங்கேலலின் நினைவு கூரலும், தாதியியல் சஞ்சிகையின் உத்தியோகபூர்வ வெளியீட்டு விழாவும் இங்கு இடம்பெற்றன.

இந் நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் சாமிக எச். கமகே, பிரதிப் பணிப்பாளர் நாயகம் சுமேதா பிரியபாஷினி, இலங்கை தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பிரதீப் விஜேசிங்க, இலங்கை தாதியர் சபையின் தலைவர் டபிள்யூ.ஏ. கீர்த்திரத்ன, தேசிய தொழிற்சங்க ஒன்றியத்தின் செயற்குழு உறுப்பினர் டி.எம். விஜேரத்ன மற்றும் அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பி. மெதிவத்த உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇


Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects