வெசாக் தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் தானசாலைகளை பதிவு செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் (29.05.2026) நிறைவடைவதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தானசாலைகளை நடத்துவோர், தத்தமது பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் ஊடாக உரிய பிரதேச சுகாதார அதிகாரி அலுவலகத்தில் தங்களது தானசாலைகளைப் பதிவு செய்ய வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
பொதுமக்கள் மற்றும் தானசாலைகளில் கலந்துகொள்வோரின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தானசாலைகளின் போது பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டல் நெறிமுறைகள் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ளன.
தானசாலைகளை ஏற்பாடு செய்பவர்கள் மற்றும் சமைப்பவர்கள் பின்பற்ற வேண்டிய சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு முறைகள் இந்த வழிகாட்டலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த விசேட அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல் கோவைகளை சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.epid.gov.lk எனும் முகவரியின் ஊடாக தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










