இலங்கை பரீட்சைத் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்படும் பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உட்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. 

2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடாத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள 2026 க.பொ.த (சாதாரண தர) பரீட்சைக்கு விண்ணப்பிக்க எதிர்பார்க்கும் விண்ணப்பதாரர்களின் தேசிய அடையாள அட்டைகளைத் தயாரித்துக் கொள்வதற்கான அறிவுறுத்தல்களை வழங்குமாறு அனைத்து அதிபர்களுக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதற்கமைய, குறிப்பிட்ட பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுவதற்கு முன்னர், தங்களது தேசிய அடையாள அட்டையைத் தயாரித்துக் கொள்வது அனைத்து பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களின் பொறுப்பாகும் என அந்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇


Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects