12 சதவீதத்தால் பேருந்து கட்டணத்தை அதிகரிக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம், ஆகக் குறைந்த கட்டணம் 30 ரூபாவில் இருந்து 34 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கட்டண திருத்தம் இம் மாதம் 5 ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
சாதாரண சேவையின் கீழான பேருந்து கட்டணத்தை 100 கிலோமீற்றருக்கும் குறைந்த பயணத்தூரத்திற்கு 12 சதவீதத்தினாலும், 100 அல்லது அதற்கும் மேற்பட்ட கிலோமீற்றருக்கான பயண தூரத்திற்கு 20 சதவீதத்தினாலும் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் சொகுசு பேருந்துகளுக்கான கட்டணத்தை முதல் 100 கிலோமீற்றருக்கான பயண தூரத்திற்கு 12 சதவீதத்தினாலும், 100 கிலோமீற்றருக்கும் அதிக பயணத் தூரத்திற்கு 15 சதவீதத்தினாலும் அதிரிக்கப்பட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










