நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று 14.12 . 2023 பிற்பகல் 1 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் மேல், சபரகமுவ, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
அத்துடன், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு, மாத்தளை, பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(வளிமண்டலவியல் திணைக்களம்)
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇