அரச அதிகாரிகளின் ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்வதில் ஏற்படும் காலதாமதங்களைத் தவிர்க்கும் நோக்கில், ஓய்வுபெறவுள்ள அதிகாரிகளுக்கான விசேட இணையவழி (Online) விழிப்புணர்வு அமர்வுத் தொடரொன்றை இன்று (09.07.2026) முதல் ஆரம்பித்துள்ளது என ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அடுத்த ஆறு மாதங்களுக்குள் ஓய்வுபெறவுள்ள அனைத்து அரச அதிகாரிகளுக்குமாக இந்த விசேட விழிப்புணர்வு அமர்வுத் தொடர் நடத்தப்படுகிறது.
எந்தவொரு தாமதமுமின்றி, உரிய நேரத்தில் ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்வது ஒவ்வொரு அரச அதிகாரியினதும் உரிமையாகும் என்பதால், அரச அதிகாரிகள் தங்களது ஓய்வூதியக் காலத்தை எவ்வித சிரமமுமின்றி ஆரம்பிப்பதற்கான வழிகாட்டல்களை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இந்த விசேட பயிற்சி அமர்வுகளில் கலந்துகொள்வதன் மூலம் அரச அதிகாரிகளுக்குப்
பல முக்கிய நன்மைகள் கிடைக்கவுள்ளன:
- ஓய்வூதிய விண்ணப்பப் படிவங்களைச் சரியாகப் பூர்த்தி செய்யும் முறை.
- தேவையான ஆவணங்களை முன்கூட்டியே தயார் செய்யும் விதம்.
- ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்வதில் ஏற்படும் தாமதங்களைக் குறைப்பதற்குக் கையாள வேண்டிய வழிமுறைகள் பற்றிய விரிவான அறிவு வழங்கப்படவுள்ளது.
இத்திட்டத்தின் முதலாவது அமர்வுஇன்று (09.07.2026) மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை மைக்ரோசாப்ட் டீம்ஸ் (Microsoft Teams) மென்பொருள் ஊடாக நடைபெறுகின்றது.
- Meeting ID: 466 100 162 633 06
- Passcode: yH6Zb9BL
- இணைப்பு: Microsoft Teams Link
அரச அதிகாரிகளின் தேவைக்கேற்ப, இந்த விழிப்புணர்வுத் திட்டத்தின் தமிழ் மொழிமூல அமர்வொன்றையும் எதிர்காலத்தில் நடத்துவதற்கு ஓய்வூதியத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. எனவே, விரைவில் ஓய்வுபெறவுள்ள அனைத்து அதிகாரிகளும் தங்களது எதிர்காலப் பாதுகாப்பிற்காக இந்தத் தலைசிறந்த வாய்ப்பைத் தவறவிட வேண்டாம் என ஓய்வூதியத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










